போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-25 13:43 GMT

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை சாலையின் இரு புறமும் எண்ணற்ற கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இருசக்கர வாகனங்களை முதன்மை சாலையில் நிறுத்தி விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் முதல் தேரடி வரை ஒரு இடத்தில் கூட " நோ- பார்க்கிங்" அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் அமைக்கவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேரடி முதல் பஸ் நிலையம் வரை எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்