திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றர். ஆனால் இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். பஸ்பேருந்தூ குறைவாக உள்ளதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.