ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிளில் சிலர் தங்களது இருச்சக்கர வாகனங்களை சாலையில் அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள், சாலையை கடக்க காத்து நிற்பவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் எதிரே பயணிக்கும் பிற வாகனஓட்டிகளும் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள், சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?