இருசக்கர வாகனங்களால் விபத்து

Update: 2026-08-02 15:02 GMT

குமாரபாளையம் சேலம் மெயின் ரோடு பகுதிகளில் அமைந்துள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே, மதுப்பிரியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், பிற வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல முடியாமல் மிகுந்த இடையூறுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்