தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையோரம் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சாலையின் அளவு சுருங்கிப்போயுள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.