திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து இனாம் குளத்தூர் வழியாக மணப்பாறைக்கு கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த தனியார் பஸ் சேவை தற்போது வேறு வழியில் இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் தினசரி போக்குவரத்து வசதியின்றி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன்கருதி திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு இனாம் குளத்தூர் வழியாக இருமார்க்கத்திலும் சீரான கால இடைவெளியில் அரசு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.