புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம், மின்வாரிய அலுவலகம், அண்ணாசிலை ரவுண்டானா மற்றும் ஆலங்குடி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் கட்டுப்பாடற்ற முறையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரங்களில் சாலையோர உணவக கழிவு தொட்டிகளை மாடுகள் தட்டிவிடுவதால் தூய்மைப் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலைகளில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.