கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தியாகதுருகத்திற்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே செல்கின்றன. இதனால் தியாகதுருகத்தில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் இரவு நேரங்களில் தியாகதுருகம் வந்து செல்வதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.