ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்துக்கு உள்ளே வராமல் வெளியே நின்று செல்லும் அவலம் உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.