பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதில் மேம்பால கட்டிடத்தில் இரும்பு கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீண்டப்படி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.