பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் பயணிகள் அவதி

Update: 2026-06-14 14:13 GMT

நாமக்கல்-ராசிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்கள் முன்பு லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் தூங்கி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களிடம் பொதுமக்கள் கேட்டால் தகராறில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக கருங்கல்பாளையம், பெருமாள் கோவில்மேடு உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் அதிகளவில் லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 7 வரை அங்கேயே நிற்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பஸ் நிறுத்தங்களில் நிறுத்தும் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்