போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2026-06-14 13:49 GMT

மொரப்பூர்-தர்மபுரி மெயின் ரோட்டில் மொரப்பூர் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இந்த வங்கி முன்பாக வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லை. இதனால் மொரப்பூர்-தர்மபுரி மெயின் ரோட்டை ஒட்டி நிறுத்துவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளன. எனவே வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்