ஆரணி நகரில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, மண்டி வீதி, அண்ணா சிலை அருகில், காமராஜர் சிலை அருகில் போக்குவரத்துச் சிக்னல்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதில் காந்தி சிலை அருகில் அமைக்கப்பட்ட சிக்னல் மட்டும் மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காந்தி ரோட்டிலும் பழைய பஸ் நிலையம், மணி கூண்டு அருகே, காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்ட போக்குவரத்துச் சிக்னல்கள் இன்று வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. உடனடியாக போக்குவரத்துச் சிக்னல்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-சிவாஜிலிங்கம், ஆரணி.