விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-11-22 14:37 GMT

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா, நன்செய் புகளூர் தவிட்டுப்பாளையத்தில் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தப்படுகின்றன. பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்