புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு, அதிகாலை நேரங்களில் கிராவல் மண் உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல், தார்ப்பாய் கொண்டு மூடாமல் குறுக்கு வழிகளில் அதிவேகமாக செல்வதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் மண், தூசி விழுகிறது. இதனால் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோத கனிமவளக் கடத்தலைத் தடுத்து, விதிமுறைகளை மீறும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.