கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-11-22 14:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து ஒடுக்கம்பட்டி, சமாளிப்பட்டி, வாலியம்பட்டி, நவாப்பட்டி, பொன்னக்குடிப்பட்டி, கொங்கதிரையன்பட்டி, கீழையூர் உள்ளிட்ட வழித்தடங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. தற்போது குறைந்த அளவில் இயக்கப்படும் பஸ்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், மதியம் கீரனூரில் இருந்து கீழையூருக்கு புதிய பஸ் சேவையை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்