மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் அரசு பஸ்கள் போதுமான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால் நடுவழியில் பழுதாகி நிற்கிறது. குறிப்பாக டயர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், அடிக்கடி வெடிக்கிறது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.எனவே அரசு பஸ்களை பராமரிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.