குன்னூரில் நகர பகுதியில் இருந்து நல்லப்பன் தெரு, கேட்டில் பவுண்ட் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வாடகை வாகனங்களுக்கு அதிக ெதாகை செலவிடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.