பல்லடம் என்.ஜீ.ஆர்.ரோட்டில், தடை செய்யப்பட்ட நேரங்களில் வாகனங்கள் வருகின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கடைவீதியில் பொருட்கள் வாங்க வருபவர்கள் சிரமப்படும் நிலை காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால், பல்லடம்.