கரூர் மாவட்டம், திருமாநிலையூர் பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து சிக்னலை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.