போக்குவரத்து நெரிசல்

Update: 2026-11-15 14:13 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். இந்த நகராட்சியில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் எப்போது பார்த்தாலும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் ஆங்காங்கே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. பெரிய விபத்து ஏற்படும் முன்பு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்