புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் ரெயில்வே கேட்டில் ரெயில்கள் செல்வதற்காக கேட் மூடப்படும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறுகிய இடைவெளியில் வாகனங்கள் முந்திச் செல்ல முயற்சிப்பதால் விபத்து அபாயமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.