மாநில நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?

Update: 2026-11-15 10:48 GMT

கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கெட் பகுதியில் இருந்து மாநில எல்லை வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலையை விரிவாக்கும் செய்யும் பணி முழுமை பெறாமல் உள்ளது. அத்துடன் மாநில நெடுஞ்சாலையில் செங்குட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோவில் பகுதி என முக்கியமான பகுதிகளில் சாலையை கடப்பதற்கு எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இந்தச் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிறுவப்பட வேண்டிய எந்த விதமான எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படாமல் உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?

-பி. துரை, செங்குட்டை, காட்பாடி.

மேலும் செய்திகள்