அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் சிமெண்டு ஆலை நுழைவாயில் வரையிலான முத்துவாஞ்சேரி சாலையின் இருபுறங்களிலும் ஆலைக்கு செல்லும் லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, லாரிகளை சாலையோரம் நிறுத்துவதைத் தடுத்து, அதற்கென ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தில் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.