ஏரியூர் கடைவீதிகளில் சரக்கு வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. மேலும், காய்கறி-பழங்கள் உள்ளிட்ட விற்பனை செய்யும் வாகனங்கள் தினசரி காலை முதல் மாலை வரை சாலையோரம் நிறுத்தப்பட்டு விற்பனை செய்கின்றன. இதன் காரணமாக ஏரியூர் கடைவீதி பகுதி முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைக்கு நோயாளியை ஏற்றி செல்லும் ஆம்புலன்சுகளுக்கு கூட அப்பகுதியில் வழிவிட இயலாத சூழல் ஏற்படுகிறது. சாலையோரம் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.