திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில், பயணிகள் 3-வது நடைமேடை வழியாக உள்ளே செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக 3-வது நடைமேடை அருகே பயணிகள் நடந்து செல்லும் இடத்தில் ஆபத்தான முறையில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.