திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து கண்ணுடையான்பட்டி வழியாக ராஜாளிப்பட்டிக்கு இயக்கப்பட்ட மினி பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மணப்பாறையில் இருந்து கண்ணுடையான்பட்டி வரை இயக்கப்படும் அரசு பஸ்சை ராஜாளிப்பட்டி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.