அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2026-11-15 19:21 GMT

வேலூர், ஆரணியில் இருந்து தினமும் போளூர் வழியாக திருவண்ணாமலைக்கும், தென் மாவட்டங்களுக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், உள்ளூரில் இயக்கப்படும் வெற்றிப் பயணப் பஸ்களும் சென்று வருகின்றன. வெற்றிப்பயணப் பஸ்கள் போளூரை அடுத்த நாயுடுமங்கலம், மல்லவாடி போன்ற நிறுத்தங்களில் நிற்பதில்லை. அதேபோல் வெளியூர் செல்லும் பஸ்களும் போளூரில் நிற்பது இல்லை. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து வெளியூர் பஸ்களும் போளூரில் நின்று செல்ல வேண்டும். அத்துடன் வெற்றிப் பயணப் பஸ்களும் அனைத்து நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்