திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை பஸ் நிறுத்தத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்துதரவேண்டி பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.