விருதுநகர் மாவட்டம் புதிய பஸ்நிலையத்துக்குள் இரவு நேரங்களில் ஒரு சில பஸ்கள் வந்து செல்வதில்லை. இதனால் பயணிகள் பஸ் வரும் என நினைத்து காத்துக்கிடந்து ஏமாற்றமடைகின்றனர். மேலும் பகலில் பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் இரவில் புறக்கணிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வயதானவர்கள் வெளியே நிற்கும் பஸ்களை பிடிக்க முடியாமல் தவற விடுவதுடன் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இரவில் பஸ் நிலையத்துக்குள் முறையாக பஸ்களை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.