அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2026-11-22 14:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர் அருகே உள்ள காயாம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம், சுந்தம்பட்டி வழியாக சடையம்பட்டிக்கு பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, காயாம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம், சுந்தம்பட்டி வழியாக சடையம்பட்டிக்கு அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்