அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதி மற்றும் சென்னை, கும்பகோணம், சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.