போக்குவரத்து விதியை மீறலாமா?

Update: 2026-11-22 14:08 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தனித்தனியாக சாலை உள்ளது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறி ஒருவழிப்பாதை வழியாக சில பஸ்கள் பஸ்நிலையத்திற்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள், மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்