விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-11-22 14:39 GMT

கரூர் மாவட்டம் புகளூர் செம்படாபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களில் 2 டிப்பர்களில் அதிக அளவு கரும்பு பாரம் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதிக பாரத்துடன் அதிவேகமாக செல்லும் டிராக்டர்களை உடனடியாக நிறுத்த முடியாததால் முன்னால் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையோரம் செல்வோர் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் டிப்பர்களில் இருந்து கரும்புகள் சரிந்து விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டர் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்