போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-11-22 16:01 GMT

சித்தோடு புறவழிச்சாலையில் உள்ள செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதேபோல் நசியனூர் அருகே ஆட்டையம்பாளையத்திலும் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆமை வேகத்தில் நடக்கும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்