கள்ளக்குறிச்சியில் சேலம்- துருகம் ரோடு, மற்றும் காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களை தாறுமாறாக சாலைகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் நிகழ்கிறது. பெறும் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.