சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமமடைகின்றனர். அவசரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை தொடர்கிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?