போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள்

Update: 2026-06-14 14:37 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சேலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பஸ் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்