தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே நல்ல குட்ல அள்ளி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடத்தூரிலிருந்து நல்ல குட்ல அள்ளி செல்லும் தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக் காலங்களில் சாலையில் குழிகளில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் சாலையை கடந்து செல்லும் போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?