திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி வழியாக சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், லாரிகள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் வக்கம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முடியாமல் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.