போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-25 13:53 GMT

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் சேலம் சாலை, சென்னை சாலை, காந்தி சாலை, பெங்களூரு சாலை, சப்-ஜெயில் சாலை என பிரிவு சாலைகள் உள்ளன. கிருஷ்ணகிரியை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் நாள்தோறும் கிருஷ்ணகிரி வருகிறார்கள். இவர்கள் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் இருந்து தங்களின் ஊர்களுக்கு செல்கிறார்கள். இந்த பகுதியில் தனியார் பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போலீசார் ரவுண்டானா அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் உடனடியாக பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்