தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாற்றுத்திறனாளிக்கான கழிவறை பூட்டியே உள்ளது. இதனால் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவார்களா?