கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வாயிலில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு மாதக்கணக்கில் எரிவதில்லை. இதனால் பஸ் நிலையமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே உயர்கோபுர மின் விளக்கை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.