கரூர் மாவட்டம் திருமானூரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிக்னல் பழுதடைந்ததன் காரணமாக கடந்த சில மாதங்களாக பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதினால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.