கரூர் ஜவகர் பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.