போக்குவரத்து நெரிசல்

Update: 2024-06-16 20:47 GMT
  • whatsapp icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். இதனால் திருவண்ணாமலையில் பல்வேறு தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கட்டபொம்மன் தெருவில் உள்ள கடைகளின் எதிரே ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.செந்தில், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி