டிரைவர் இருக்கையில் அமர்ந்து பயணிகள் பயணம்

Update: 2025-02-16 19:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா காஞ்சீபுரத்தில் இருந்து தூசி கிராமம் வழியாக மாங்கால் சிப்காட் பகுதிக்கு தொழிலாளர்கள் பலர் வருகிறார்கள். அவர்களில் சிலர் ஆட்டோக்களில் வந்து செல்கிறார்கள். ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள், தொழிலாளர்களை ஏற்றுகிறார்கள். அதில், பெண்கள் ஆட்டோக்களில் டிரைவரின் இருக்கை, கம்பியில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்நாசர், தூசி. 

மேலும் செய்திகள்