நெடுஞ்சாலையில் நிறுத்தப்படு்ம் அரசு பஸ்கள்

Update: 2026-10-11 11:29 GMT

கோவை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பொங்கலூர் அருகே நெடுஞ்சாலையில் செல்லும் அரசு டவுன் பஸ்கள் திடீரென சாலையின் மையப்பகுதியில் பஸ்சை நிறுத்தி பயணிகள் ஏற்றப்படுகின்றனர். நெடுஞ்சாலையில் டவுன் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது பெரும் விபத்துக்கு வித்திட வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் டிரைவர்கள் இதை உணர்ந்து சாலையோரமாக வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ்் குமார், பொங்கலூர்.

மேலும் செய்திகள்