நெல்லையில் இருந்து சாத்தான்குளம் மற்றும் திசையன்விளைக்கு இரவு 10.30 மணிக்கு பிறகு பஸ் வசதி இ்ல்லை. பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு தான் பஸ் வசதி உள்ளது. எனவே சென்னையில் இருந்து பகலில் வந்தே பாரத் ரெயிலில் வருகிறவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல தாமதமாக வருகிறவர்கள் இரவு முழுவதும் நெல்லை பஸ் நிலையத்தில் காத்து கிடக்கும் அவலநிலை உள்ளது. எனவே இரவு 12 மணி அளவில் நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு பஸ் இயக்கினால் பெரும் உதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.