போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள்

Update: 2026-06-21 18:03 GMT

திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன்கோவில், செல்லாண்டியம்மன் கோவில், வளர்மதி சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இந்த பாலத்தை பயன்படுத்தும். இந்நிலையில் நொய்யல் ஆற்றின் கரையோர சாலையை யொட்டி மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கும் போது மின் கம்பத்தில் மோதும் நிலை உள்ளது. தற்போது இந்த பாலத்தின் பணிகள் முடிந்து பஸ்கள் போக்குவரத்து அதிகமானால் இந்த மின்கம்பங்கள் பெரும் இடையூறாக இருக்கும். எனவே இந்த மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் நடவேண்டும்.


மேலும் செய்திகள்